Categories
தேசிய செய்திகள்

சாலையோரம் நீர் நிரம்பியிருந்த குழியில்… அடுத்தடுத்து 3 சிறுமிகள் விழுந்து பலியான சோகம்..!!

அரேரியா மாவட்டத்தில் சாலையோரம் நீர் நிரம்பியிருந்த குழிகளில் விழுந்து 3 சிறுமிகள் பரிதாபமாக இறந்தனர்.

பீகார் மாநிலம், அரேரியா மாவட்டம் நஹர் டோலா என்ற பகுதியில் வசித்து வரும் குர்பன் அன்சாரி என்பவரின் மகள் சர்பின் அன்சாரி (17), ஆலம் என்பவரின் மகள் அஃப்ஸரி ஆலம் (17), ரபீக் என்பவரின் மகள் பிங்கி (10) ஆகிய 3 பேரும் தங்களது தோழி ஒருவருடன் கால்நடைகளுக்கு புல் தீவனம் சேகரிப்பதற்காக வெளியில் சென்றிருந்தனர்.

பின்னர் தீவனங்கள் சேகரித்துவிட்டு வீட்டுக்கு திரும்பும்போது பிங்கி கால் தடுமாறி சாலையோரம் நீர் நிரம்பியிருந்த குழிக்குள் விழுந்து விட்டார். இதனைக்கண்ட சர்பின், பிங்கியைக் காப்பாற்ற  முயற்சி செய்தார்.. அப்போது அவரும் நிலை தடுமாறி குழிக்குள் தவறி விழுந்தார்.

இதைப் பார்த்த அஃப்ஸரி இருவரையும் காப்பாற்ற தன்னுடைய கையை நீட்டினார்.. இந்த முயற்சியின் போது அஃப்ஸரியும் பரிதாபமாகக் குழிக்குள் விழுந்தார். இந்த சம்பவத்தைப் பார்த்துக் கொண்டிருந்த மற்றொரு சிறுமி இவர்கள் 3 பேரையும் காப்பாற்றுவதற்கு சத்தமாக குரல் எழுப்பினார். ஆனால் யாரும் வரவில்லை.. அதனைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து, தனது கிராமத்தினர்கள், குடும்பத்தினர் ஆகியோரிடம் சிறுமி தெரிவித்ததையடுத்து அவர்கள் விரைந்து வந்து குழிக்குள் விழுந்த 3 சிறுமிகளின் உடல்களை மீட்டனர்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவத்தில் இறந்த சிறுமிகளின் குடும்ப உறுப்பினர்கள் உடற்கூறாய்வுக்காக அவர்களின் உடல்களை போலீசாரிடம் ஒப்படைக்க மறுத்து விட்டனர்.

Categories

Tech |