ஆப்கானிஸ்தானில் நடந்த கார் குண்டு வெடிப்பில் 3 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபகாலமாக ஆப்கானிஸ்தான் நாட்டுக்கும், தாலிபான் நாட்டிற்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது. இருந்தாலும் இருநாடுகளும் சமாதான நிலையை அடைய பல முறை திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் பால்க் மாவட்டத்திலுள்ள ராணுவப் படையினரை குறிபார்த்து தாலிபான் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலை ஒரு காரில் குண்டு வைத்து வெடிக்கச் செய்து நடத்தியுள்ளது. நடந்த தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர் என ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுக்கொண்ட தலிபான் அமைப்பு, தாங்கள் நடத்திய தாக்குதலில் 15 பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது. ஏற்கனவே உள்நாட்டு போரை முடித்துக் கொள்ளும் நிலையில் சமாதான பேச்சு நடத்திய இருநாடுகளும் தற்போது நடந்த இந்த தாக்குதலால் அதற்கு வாய்ப்பில்லாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.