Categories
சேலம் மாவட்ட செய்திகள்

குழந்தையின் விலை 20 ஆயிரமா?….பொதுமக்கள் அளித்த தகவல் ….விசாரணையில் தெரிந்த உண்மை….!!

ரூ.20000-க்கு மூன்று மாத ஆண் குழந்தை வாங்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் உடையார்பாளையம் பகுதியில் விவசாயியான அங்கமுத்து வசித்து வருகிறார். இவருக்கு சாந்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியருக்கு திருமணமாகி வெகுநாட்கள் ஆகியும் குழந்தை இல்லை. ஆனால் கடந்த சில நாட்களாக ஒரு ஆண் குழந்தையை வளர்த்து வந்ததை கண்ட அப்பகுதி மக்கள் சந்தேகப்பட்டு மாவட்ட ஆட்சியர் கார்மேகத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின்படி சேலம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்களுக்கு இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள ஆட்சியர் ஆணை பிறப்பித்துள்ளார்.

இதனையடுத்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இவர்கள் குழந்தையை  20000 ரூபாய் கொடுத்து கேரளாவிலிருந்து வாங்கி வளர்த்து வருவது தெரியவந்துள்ளது. இதனையடுத்து பிறந்து 3 மாதமே ஆன ஆண் குழந்தையை சட்டப்படி தத்தெடுக்காததால் அலுவலர்கள் அக்குழந்தையை கைப்பற்றினர். மேலும் காவல்துறையினர் அக்குழந்தையின் பெற்றோர் யார்? என்பது பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |