Categories
உலக செய்திகள்

அய்யோ கடவுளே..! இப்படி ஒரு கொடூரமா..? மூன்று மாத பிஞ்சு குழந்தை… அயர்லாந்தில் நடந்த சோகம்..!!

அயர்லாந்தில் மூன்று மாத பெண் குழந்தை நாய் கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அயர்லாந்தில் சிலசம்பூ என்ற கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வரும் மூன்று மாத பெண் குழந்தையை நேற்று அதிகாலையில் அங்குள்ள நாய் ஒன்று மிக மோசமாக கடித்து குதறியுள்ளது. இதனால் அந்த குழந்தைக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்து வந்த அவசர உதவி குழுவினர் அந்த குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக கார்க் பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

ஆனால் அங்கு எதிர்பாராதவிதமாக அந்த குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அந்த 3 மாத பெண் குழந்தையின் உடல் பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |