Categories
மாநில செய்திகள்

“கொலை செய்ய 3 மாதம் ஒத்திகை”….. ஜூஸில் கொஞ்சம் கொஞ்சமாக விஷம்….. வாலிபர் கொலையில் காதலியின் பகீர் வாக்குமூலம்…..!!!!!

தமிழக-கேரள எல்லையில் பாறசாலை மூறியன்கரை பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் ஜெயராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிஎஸ்சி ரேடியாலஜி படித்து வந்த சாரோன் ராஜ் என்ற 23 வயது மகன் இருந்துள்ளார். இவர் களியக்காவிளை அருகே உள்ள ராமவர்மன் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். கடந்த 14-ம் தேதி சாரோன் தன்னுடைய நண்பருடன் காதலி வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு அவருடைய காதலி குடிப்பதற்கு கசாயம் மற்றும் குளிர்பானம் கொடுத்துள்ளார். அதன் பிறகு வீட்டில் இருந்து வெளியே வந்த வாலிபருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.

இது குறித்து வாலிபர் தன்னுடைய நண்பனிடம் கூறவே அவர் சாரோனை பாறசாலை பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளார். அங்கு வாலிபருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். கடந்த 11 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சாரோன் உடல் உறுப்புகள் அனைத்தும் செயலிழந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வாலிபரின் தந்தை ஜெயராமன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அந்த புகாரில் தன்னுடைய மகனின் காதலி மற்றும் பெற்றோர் தன்னுடைய மகனை வீட்டிற்கு வரவழைத்து குளிர்பானத்தில் ஆசிட் கலந்து கொடுத்துள்ளனர் என்று கூறியுள்ளார். அந்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் தன்னுடைய மகனின் மரணம் குறித்து ஜெயராமன் கூறியதாவது, என்னுடைய மகன் காதலித்து வந்த பெண்ணுக்கு ராணுவ வீரர் ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், அப்பெண்ணின் முதல் கணவர் இறந்து விடுவதாக ஜோசியக்காரர் கூறியுள்ளார்.

இதனால் என்னுடைய மகனை திட்டம் போட்டு அவர்கள் வீட்டிற்கு வரவழைத்து குளிர்பானத்தில் ஆசிட் கலந்து கொடுத்துள்ளனர். இதை குடித்த என்னுடைய மகன் உடல் உறுப்புகள் அனைத்தும் செயல் இழந்து பரிதாபமாக உயிரிழந்து விட்டான். அவர்கள் மூடநம்பிக்கையின் காரணமாக என்னுடைய மகனை திட்டம் போட்டு கொலை செய்து விட்டனர் என்று கூறினார்.

இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் வாலிபரின் காதலி கிரீஷ்மா அவரை கொலை செய்தது தெரிய வந்ததால் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளது. அதாவது வாலிபரை கொல்வதற்கு க்ரீஷ்மா 3 மாதங்களுக்கு முன்பு இருந்தே ஒத்திகை பார்த்துள்ளார். இதற்காக பல முறை வாலிபரை வெளியே அழைத்துச் சென்று ஜூஸ் சேலஞ்ச் செய்து கொஞ்சம் கொஞ்சமாக விஷம் கொடுத்துள்ளார். மேலும் வாலிபர் இறப்பதற்கு ‌ முன்பாகவும் குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்ததால் தான் உடல் உறுப்புகள் செயல் இழந்து உயிரிழந்துள்ளார் என்பதை விசாரணையில் தெரியவந்துள்ளது.

Categories

Tech |