Categories
தேசிய செய்திகள்

கொரோனா வைரஸ்: தவறான தகவல் பரப்பிய மூவர் கைது!

 கொரோனா வைரஸ் தொற்றுத் தொடர்பாக சமூக வலைதளங்களில் தவறான தகவல்களைப் பரப்பிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சீனாவில் பல்வேறு பகுதிகள், கொரோனா வைரஸ் காரணமாக கடும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. கனடா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. அதேபோல கேரளாவிலும் இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே. சைலஜா, “கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது. கொரோனா வைரஸ் தொர்பாக தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து வந்துள்ளவர்கள் குறித்த தவறான தகவலைப் பரப்பிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்தத் தவறான செய்தியை ஆறு பேர் ஃபார்வேர்டு செய்துள்ளனர். இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

Categories

Tech |