Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

டேய் அந்த பொண்ண விடுடா… தட்டி கேட்ட மூவருக்கு கத்திக்குத்து… தப்பிய கொடூரன்..!!

கோபிச்செட்டிபாளையம் அருகே பாலியல் தொல்லையை தட்டிக்கேட்ட 3 பேருக்கு கத்திகுத்து விழுந்துள்ளது.

நாளுக்குநாள் சமூகத்தில் பாலியல் தொல்லை அதிகரித்து கொண்டே வருகிறது. சட்டங்கள் கடுமையாக இருந்தால் மட்டுமே இதை கட்டுப்படுத்த முடியும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே பாலியல் தொல்லையை தட்டிக்கேட்ட 3 பேருக்கு கத்திகுத்து விழுந்துள்ளது. பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்த கண்ணதாசனை ராஜேஷ்குமார், சதீஷ், ரவி ஆகிய 3 பேர் தட்டி கேட்டுள்ளனர்.

Related image

இதனால் ஆத்திரமடைந்த அவர் மூவரையும் கத்தியால் குத்திவிட்டு தப்பி விட்டார். தாழைக்கொம்பு புதூரில் படுகாயமடைந்த 3 பேரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கத்தியால் குத்திய கண்ணதாசன் தலைமறைவாகியுள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |