Categories
தேசிய செய்திகள்

இந்த தேதி வரை…. மூன்று வேளையும் இலவச உணவு… வெளியான அதிரடி அறிவிப்பு..!!

ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை எளிய மக்களும் மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மூன்று வேளையும் இலவச உணவு வழங்கப்படும் என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு போன்றவை அமல்படுத்தப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வந்த காரணத்தினால் இரண்டு வாரங்களுக்கு மூல ஊரடங்கு என்ற கட்டுப்பாட்டை அறிவித்திருந்தது. மேலும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், கூலி தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டது.

இதனால் இந்திரா கேன்டீனில் காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் உணவு அளிக்க கர்நாடக அரசு ஏற்பாடு செய்துள்ளது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள மே 24ஆம் தேதி வரை இலவசமாக உணவு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக பெங்களூரு மாநகராட்சிக்கு இயற்கை பேரிடர் நிதியாக 300 கோடியை கர்நாடக அரசு விடுவித்துள்ளது. அதில் 25 கோடியை மக்களுக்கு இலவச உணவு திட்டத்திற்கு மட்டும் பயன்படுத்துமாறு ஆணையர் கவுரவ் குப்தாவிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |