Categories
தேசிய செய்திகள்

இமாச்சல் பிரதேசத்தில் மும்முனை போட்டி….. தேர்தல் களப்பணியில் அதிரடி காட்டும் காங்கிரஸ்….‌ பிரச்சாரம் நிறைவு….!!!!!

இமாச்சல் பிரதேசத்தில் நவம்பர் 12-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த மாநிலத்தில் மொத்தம் 68 தொகுதிகள் இருக்கிறது. அதன்பிறகு ஏற்கனவே ஆட்சியில் இருக்கும் பாஜக மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் நோக்கில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதன் பிறகு காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட, ஆம் ஆத்மி கட்சி களத்தில் புதிதாக குதித்துள்ளதால் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பாஜகவுக்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். நேற்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடையும் நிலையில் அனைத்து தொகுதிகளுக்கும் சேர்த்து ஒரே பொதுக்குழு கூட்டத்தை நடத்துவதற்கு காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. அதன்படி சிர்மோர் பகுதியில் நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கலந்து கொண்டு பேசுகிறார். மேலும் பிரியங்கா காந்தி சிம்லா பகுதியில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளார்.

Categories

Tech |