“விண்ணை தாண்டி வருவாயா” இந்த காதல் வரிகளுக்கு சொந்தக்காரர் திரிஷா. ஒட்டுமொத்த இளைஞர்களையும் ஜெஸ்ஸி என்ற வார்த்தைக்குள் சிக்கவைத்த வித்தைக்காரரும் இவரே. மௌனத்தில் பேசிய சந்தியா முதல் வருஷத்தில் மழையாய் பொழிந்த சைலஜா வரை. காதலில் கில்லி அடித்த தனலட்சுமி முதல் கோடியில் சொல்லி அடித்த ருத்ர வரை,சாமியில் பவ்யமான புவனா முதல் 96 படத்தில் உள்ளத்தை கவர்ந்தது ஜானு வரை அனைத்து கதாபாத்திரங்களிலும் கச்சிதமாய் பொருந்தியவர் இவர். இந்த நாயகி கனவுக்கன்னியாக மட்டுமில்லாமல் கனவு கலை உலகில் பொக்கிஷமாக வளர்ந்து நிற்கிறார்.
மே 4 1983 பாலக்காட்டில் உள்ள தமிழ் குடும்பத்தில் பிறந்தார் திரிஷா கிருஷ்ணன். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா படித்த சென்னை சர்ச் பார்க்கில் தான் திரிஷாவும் பள்ளிப்படிப்பை முடித்தார். இதனையடுத்து பட்டப்படிப்பை எதிராஜ் கல்லூரியில் முடித்தார். திரைத்துறையில் கால் பதிப்பதற்கு முன்பாக முதலில் மாடலிங் துறையில் கோல் ஊன்றினார் த்ரிஷா. 1999இல் மிஸ் சேலம் பட்டத்தையும் மிஸ் சென்னை பட்டத்தை வென்றார். 2001 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்று மிஸ் ப்யூடிஃபுள் ஸ்மைல் பட்டத்தையும் வென்றார்.
1999 முதல் 2019 வரை யிலான திரிஷாவின் 20 ஆண்டு கால திரையுலக பயணத்தில் அவர் உயிர் கொடுத்த கதாபாத்திரங்கள் கலை உலக வரலாற்றில் மறக்க முடியாதவை. 1999இல் ஜோடி படத்தில் நடிகை சிம்ரனுக்கு தோழியாக தமிழ் சினிமாவிற்குள் துணை நடிகையாக அறிமுகமானார். திரிஷா 2019 இல் மீண்டும் இந்த காம்போ பேட்டை திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் ஜொலித்தது. 20 ஆண்டுகால கடின உழைப்பின் பயனாய் தனக்கென தனி சரித்திரம் படைத்து இருப்பவர் நடிகை திரிஷா