இயக்குனர் ஜீத்து ஜோசப் ‘திரிஷ்யம் 2’ படத்தின் தெலுங்கு ரீமேக் பணிகளை இன்று தொடங்கியுள்ளார்.
மலையாள திரையுலகில் இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் திரிஷ்யம் . மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் ,நடிகை மீனா நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது . இந்த திரைப்படம் தமிழில் கமல்ஹாசன் -கவுதமி நடிப்பில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் ஆனது . மேலும் இந்த திரைப்படம் தெலுங்கு, கன்னடம், இந்தி, சீன மொழிகளிலும் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது .
தற்போது திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகியுள்ளது. முதல் பாகத்தைப் போலவே இந்தப் படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது . இந்நிலையில் இன்று ‘திரிஷ்யம் 2’ படத்தின் தெலுங்கு ரீமேக் பணிகளை தொடங்கியுள்ளார் இயக்குனர் ஜீத்து ஜோசப் . மேலும் அவர் நடிகர் வெங்கடேஷ் மற்றும் படக்குழுவினருடன் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார் .