Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“கழுத்தறுப்பு” தற்காப்புகலையால் தப்பிய மாணவி…… ஆகா இதல்லவா போலீஸ்….. கமிஷனர் பாராட்டு…..!!

சென்னையில் மாணவிக்கு தற்காப்புக்கலை சொல்லிக்கொடுத்த இன்ஸ்பெக்டருக்கு கமிஷனர் வெகுமதி அளித்து சிறப்பித்தார். 

சென்னை அமைந்தகரை வசித்து வரும் மாணவி ஒருவர் அதே பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.கடந்த 4ஆம்  தேதி பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்லும் வழியில் நித்தியானந்தா என்ற வாலிபர் தன்னை காதலிக்குமாறு வலியுறுத்தி உள்ளார். இதனை மறுத்ததால் அவரை கத்தியால் கழுத்து அறுக்க முடிவு செய்தார் அந்த வாலிபர்.

அப்போது தனக்கு தெரிந்த தற்காப்புக் கலையின் மூலம் வாலிபரை தாக்கி தப்பினார் மாணவி. இருப்பினும் அவருக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து வாலிபர் தப்பி ஓட மாணவியின் பெற்றோர்கள் காவல் நிலைத்தில் புகார் அளிக்க உடனடியாக வழக்கு பதிவு செய்த அதிகாரிகள் இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவியிடம்  விசாரிக்கையில், அண்ணாநகர் மாநகராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட பள்ளிகளில் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி என்பவர் அவர்களுக்கு கிடைக்கும் இடைவெளி நேரங்களில் மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி அளித்து வந்ததாகவும் அவரது பயிற்சினாலேயே அன்றைய தினம் தான் தப்பித்ததாகவும் தெரிவித்தார். இந்த தகவலை அறிந்த கமிஷனர் இருவரையும் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி சிறப்பித்தார்.

Categories

Tech |