Categories
சினிமா தமிழ் சினிமா

‘திரௌபதி’ இயக்குனரின் படத்தில் இணைந்த பிரபல இயக்குனர்… வெளியான அறிவிப்பு… எகிறும் எதிர்பார்ப்பு…!!!

‘திரௌபதி’ பட இயக்குனரின் அடுத்த படத்தில் பிரபல இயக்குனர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது .

தமிழ் திரையுலகில் இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ‘திரௌபதி’ . இந்தப் படம் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தாலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . இதையடுத்து இயக்குனர் மோகன் ஜி ‘ருத்ரதாண்டவம்’ படத்தை இயக்குகிறார் . திரௌபதி பட நடிகர் ரிச்ர்ட் ரிஷி இந்தப் படத்தில்  கதாநாயகனாக நடித்து வருகிறார் . மேலும் இந்த படத்தில் சின்னத்திரை பிரபலம் தர்ஷா குப்தா கதாநாயகியாக அறிமுகமாகிறார் .

ருத்ர தாண்டவம் படக்குழு வெளியிட்ட போஸ்டர்

இந்நிலையில் இந்த படத்தில் பிரபல இயக்குனர் கௌதம் மேனன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது . இதுகுறித்து இயக்குனர் மோகன் ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் ருத்ரதாண்டவம் படத்தில் வாதாபிராஜனாக நடிக்கயிருப்பதாக பதிவிட்டுள்ளார் .

Categories

Tech |