Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

டாஸ்மார்க் கடையில் மேற்க்கூரை வழியாக… தப்பிக்க முயன்ற நபர்… தலையில் பலத்த காயம்…!!

நாமக்கல் மாவட்டத்தில் டாஸ்மார்க் கடையில் திருடிய நபர் தப்பியோடும் போது தலையில் பலத்தகாயம் ஏற்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள டாஸ்மார்க் கடைகளில் மர்மநபர்கள் வந்து மது பாட்டில்களை கொள்ளையடித்து செல்லும் சம்பவம் தொடர்ந்து வருகின்றது. இதனால் டாஸ்மாக் கடை ஊழியர்கள் சுழற்சி முறையில் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நல்லிபாளையத்தில் உள்ள டாஸ்மாக் கடையின் விற்பனையாளர் சக்திவேல் நேற்று முன்தினம் காவல் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அதிகாலை 3 மணியளவில் கடையில் இருந்த மது பாட்டில் சத்தம் கேட்டுள்ளது.

இதனையடுத்து அவர் உள்ளே சென்று பார்த்தபோது கடையின் மேற்கூரை வழியாக ஒரு நபர் வெளியே குதித்து தப்பியோட முயற்சித்துள்ளார். இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சக்திவேல் உடனடியாக வெளியே சென்று பார்த்தபோது அந்த நபர் தலையில் பலத்த காயத்துடன் கீழே விழுந்து கிடந்துள்ளார். இதனை தொடர்ந்து சக்திவேல் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்து வந்த இன்ஸ்பெக்டர் குமார் கீழே விழுந்த நபரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துளார்.

மேலும் அவருக்கு முதலுதவி செய்தபின் நடத்திய விசாரணையில் சேலம் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் அவர் மதுபாட்டில்களை திருடும்போது கை தவறி மதுபாட்டில் ஓன்று கீழே விழுந்ததாகவும், அப்போது வெளியே இருந்த விற்பனையாளரிடம் மாட்டிக்கொள்ள கூடாது என அங்கிருந்து தப்பிக்கும் போது நிலை தடுமாறி கீழே விழுந்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Categories

Tech |