காஞ்சிபுரம் அருகே இருக்கசக்கர வாகன விற்பனை மூலம் ரூபாய் 40 லட்சம் மோசடி செய்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜா புரத்தில் இரண்டு சக்கர வாகனங்களை தவணை முறையில் விற்பனை செய்து வரும் மகேந்திரன் என்பவர் வாகனங்களை வாடிக்கையாளர்களுக்கு விற்றுவிட்டு வாடிக்கையாளர்கள் முழு தவணைத் தொகையையும் மகேந்திரனிடம் செலுத்திய பின்பும் கூட அவர் கடன் அளித்த நிதி நிறுவனங்களுக்கு அதை செலுத்தாமல் இருந்து வந்துள்ளார்.
மேலும் முழு கடன் தொகையை செலுத்திய பிறகு நிதி நிறுவனம் அளிக்கும் தடையில்லா சான்று வாடிக்கையாளர்களுக்கு போலியாக வழங்கியுள்ளார். இந்நிலை தொடர ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த நிதி நிறுவனம் காஞ்சிபுரம் மாவட்ட காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் மகேந்திரனை கைது செய்த அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொள்கையில், ரூபாய் 48 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.