அரசியலை தூக்கி எறிந்துவிட்டு கலைப் பயணத்தை தொடருங்கள் என்று கமலஹாசனுக்கு இயக்குனர் மோகன் ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இதேபோல் பிரபல நடிகரும் மக்கள் நீதி மைய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் அவர் தோல்வியை சந்தித்தார்.
இதை தொடர்ந்து மக்கள் நீதி மையம் கட்சியை சேர்ந்த பல முக்கிய நிர்வாகிகள் கட்சியிலிருந்து விலகி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் அரசியலை தூக்கி எறிந்துவிட்டு கலை பயணத்தை தொடரவேண்டும் என்று பிரபல இயக்குனர் மோகன் ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருப்பதாவது, “கமல்ஹாசன் சார். சினிமாவில் நீங்கள் ஒரு வரலாறு. அதையே தொடருங்கள். கொள்கை தெளிவில்லா த அரசியல் இப்படித்தான் இருக்கும். அரசியலை தூக்கி எறிந்துவிட்டு கலைப் பயணத்தை தொடருங்கள். சென்னையில் ஒரு மாபெரும் படப்பிடிப்பு தளம் இல்லை. இதற்காக போராடுங்கள். இதை செய்தாலே வரலாறு பேசும் உங்களை” என்று குறிப்பிட்டுள்ளார்.