Categories
இந்திய சினிமா சினிமா

“என் தங்கை மீது ஆசிட் வீச்சு”…. உடம்பில் 52 ஆப்ரேஷன்…… பரபரப்பை கிளப்பிய நடிகை கங்கனா ரணாவத்…..!!!!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் கங்கனா ரணாவத். இவர் தன்னுடைய தங்கைக்கு நடந்த ஆசீட் வீச்சு சம்பவம் குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். டெல்லியில் உள்ள துவாரகா பகுதியில் பள்ளி மாணவி மீது மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் ஆசிட் வீசியது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து விளக்கம் கேட்டு மகளிர் ஆணையம் டெல்லி காவல்துறையினருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், நடிகை கங்கனா தன்னுடைய தங்கைக்கு நடந்த கொடூர சம்பவத்தை தற்போது வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில் என்னுடைய சகோதரி ரங்கோலி இளம் வயதில் சாலையோர ரோமியோ ஒருவரால் ஆசிட் வீச்சு தாக்குதலுக்கு ஆளானார். இதன் காரணமாக என்னுடைய சகோதரிக்கு 52 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டது. இதனால் என்னுடைய தங்கை உடல் அளவிலும், மனதளவிலும் மிகவும் பாதிக்கப்பட்டார். இந்த சம்பவத்தால் எங்களுடைய குடும்பம் சொல்ல முடியாத அளவுக்கு வேதனையை அனுபவித்தது. இந்த சம்பவத்திற்கு பிறகு நான் தனியாக செல்லும் போதெல்லாம் என்னை யாராவது கடந்து சென்றால் அவர்கள் என் மீது ஆசிட் வீசி விடுவார்களோ என்ற பயம் வந்துவிடும். இதனால் என்னுடைய முகத்தை எப்போதும் மூடிக்கொண்டே செல்வேன் என்று பதிவிட்டுள்ளார். மேலும் நடிகை கங்கனாவின் பதிவு தற்போது வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Rangoli Chandel (@rangoli_r_chandel)

 

Categories

Tech |