மத்திய பிரதேச மாநிலத்தில் குப்பையில் போடப்படும் மாஸ்க் மற்றும் பிபிஇ கிட் மற்றும் கையுறைகளை கழுவி மீண்டும் விற்பனை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. ஒருவருக்கு ஒருவர் தொற்று பரவாமல் இருப்பதற்காக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகின்றது .அப்படி இருக்கும் சூழ்நிலையில் உபயோகப்படுத்தப்பட்ட மாஸ்க், பிபிஇ கிட் மற்றும் கையுறைகளை கழுவி அதை விற்பனை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. சட்னா மாவட்டத்தில் உள்ள பர்கேடா என்ற பகுதியில் சிலர் உபயோகித்தபின் குப்பைகளில் வீசப்பட்டிருந்தன மாஸ்க், பிபிஇ கிட் மற்றும் கையுறை போன்றவற்றை கழுவி அவற்றை கடைகளில் விற்பனை செய்துள்ளனர். இந்த வீடியோ வைரலான நிலையில் இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மேலும் பொதுமக்கள் பயன்படுத்தப்பட்ட மாஸ்க்களை பொதுவெளியில் கொட்டாமல் தவிர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.