Categories
தேசிய செய்திகள்

இந்திய கம்யூனிஸ்ட் பொது செயலாளராக து.ராஜா அதிகாரபூர்வமாக தேர்வு..!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளராக து.ராஜா அதிகாரபூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டார் 

தற்போது இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளராக இருக்கும் சுதாகர் ரெட்டி, உடல்நிலை காரணமாக தனது பதவியிலிருந்து விலக முடிவு எடுத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் அவர் தனக்கு பதிலாக து. ராஜாவின் பெயரை பொதுச் செயலாளராக பரிந்துரை செய்துள்ளார். இந்நிலையில் டெல்லியில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் கூட்டத்தில் பொதுச் செயலாளரை தேர்ந்தெடுப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது.

Image result for d  Raja

இதில் கேரளாவைச் சேர்ந்த பினோய் விஷ்வம், அக்கட்சியின் மூத்த தலைவர் அமர் ஜித் கவுர், அதுல்குமார் அஞ்சான் ஆகியோர் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. கூட்டத்தின் முடிவில் து.ராஜா அகில இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளராக நியமிப்பதாக முடிவு எடுக்கப்பட்டது. இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்தின் முடிவில் அதிகாரப்பூர்வமாக அகில இந்திய பொதுச்செயலாளராக து.ராஜா அறிவிக்கப்பட்டுள்ளார்.

Categories

Tech |