துலாம் ராசி அன்பர்களே, இன்று அறிமுகம் இல்லாதவர்களிடம் எந்தவிதமான பழக்கவழக்கங்களையும் வைத்துக்கொள்ள வேண்டாம். தொழிலில் சிரமங்களை தாமதமின்றி சரிசெய்வது அவசியம், பணவரவை விட இன்றைக்கு அனைத்து விஷயங்களிலும் செலவு கொஞ்சம் இருக்கும், பார்த்துக் கொள்ளுங்கள். கூடுமானவரை பொறுமையாகவும், நிதானமாகவும் செயல்படுங்கள்.
உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணி விஷயத்தில் வெளியே செல்வதாக இருந்தால் உடமைகள் மீது ரொம்ப கவனமாக இருக்கவேண்டும். உணவுப்பொருட்களை தரம் அறிந்து உண்ணுங்கள். தொழில் வியாபாரம் ஓரளவு நல்ல படியாகத்தான் இருக்கும். எதிர்பார்த்த ஆர்டர்கள் கையில் வந்து சேரும். அரசு மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் சாதகமாக தான் முடியும், உத்தியோகத்திலிருப்பவர்கள் புத்தி சாதுர்யத்துடன் நடந்துகொண்டு நன்மை அளிப்பார்கள்.
எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்க கூடிய அளவில் இன்று வாய்ப்புகளும் உங்களுக்கு அமையும். வெளியூரிலிருந்து உங்களுக்கு நல்ல தகவல் வந்து சேரும். இன்றைய நாள் எந்தவித பிரச்சனையும் இல்லை, சிறப்பான நாளாக தான் உள்ளது. இன்று மாணவர்கள் கொஞ்சம் கடுமையாக உழைத்து பாடங்களைப் படியுங்கள், படித்த பாடங்களை இன்று எழுதிப் பாருங்கள்,
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவிலேயே இருக்கும், அது மட்டும் இல்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழலாம்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் ஆரஞ்சு