இந்தியாவின் கடுமையான சூழல் குறித்து துபாயில் இந்திய தேசிய கொடி பறக்க விடப்பட்டுள்ளது.
கொரோனா 2-வது அலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. அதிலும் குறிப்பாக வடமாநிலங்களில் வைரஸ் நோயால் பாதிப்படைந்தவர்களுக்கு மருத்துவமனைகளில், ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுப் பலர் உயிரிழந்துள்ளனர். இந்த கடுமையான சூழல் காரணமாக சர்வதேச நாடுகள் அனைத்தும் இந்தியாவிற்கு உதவிக்கரம் நீட்டியது.
அந்த வகையில் தமிழக அரசும் ஆக்சிஜன் பற்றாக் குறையை சீராக்குவதற்கு ஆக வேண்டிய அளவிற்கு ஆக்சிஜனை இந்தியாவிற்கு அனுப்பி வைத்தது. இரு நாடுகளுக்கும் இடையே இருக்கும் நல்லுறவு மற்றும் ஒற்றுமையை உறுதி படுத்தும் வகையில் கடந்த வாரம் துபாயில் உள்ள உலகின் உயரமான கட்டிடம் புர்ஜ் கலீபாவில் இந்திய தேசிய கொடி பறக்கவிடப்பட்டது.
மேலும் துபாயின் ஷேக் ஜாயித் சாலையில் உள்ள டிஜிட்டல் விளம்பர பலகையில் ‘#ஸ்டே ஸ்ட்ராங்’ இந்தியா என்ற ஹாஷ் டேக்குடன் எழுத்துகளும் பொறிக்கப்பட்டிருந்தது. இந்திய மக்கள் அனைவரும் உறுதியுடன் இருக்க வேண்டும் என்று அந்த வாசகத்தில் குறிப்பிட பட்டுள்ளது.