Categories
உலக செய்திகள்

துபாயில் நிர்வாணமாக புகைப்படம் எடுத்த பெண்கள்… நாட்டை விட்டு வெளியேற்றம்…!!!

துபாயில் விளம்பரத்திற்காக `நிர்வாணமாக நின்று புகைப்படம் எடுத்த 12 பெண்கள் 1 ஆண் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் பொது இடங்களில் முத்தம் கொடுப்பது மதுபானங்கள் அருந்துவது போன்ற சமூக சட்ட விரோதமான செயல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் துபாய் மெரினா கடற்கரையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண்கள் சிலர் நிர்வாண முறையில் நின்று போஸ்  கொடுத்துள்ளதாக சமூக வலைதளங்களில் வீடியோக்களும் புகைப்படங்களும் பெருமளவில் பரவி வருகிறது.

மேலும் விசாரணை செய்த போது அந்தப் பெண்கள் கும்பலாக விளம்பரத்திற்கு போஸ் கொடுத்ததாக கூறியுள்ளனர். ஆகையால் அவ்வாறு சட்ட விரோதமாக நடந்து கொண்ட உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 12 பெண்கள் மற்றும் ரஷ்யாவை சேர்ந்த 1 ஆண் உட்பட 13 பேரையும் துபாய் காவல்துறை கைது செய்தனர். மேலும் இவர்களுக்கு ஐக்கிய அரபு அமீரக ஒழுக்க சட்டத்தை மீறியதற்காக 6 மாத சிறை தண்டனையும் 1000 டாலர்கள் (1 லட்சம் ரூபாய்) அபராதமும் விதித்து  தீர்ப்பளித்துள்ளனர்.

இது குறித்து ஐக்கிய அரபு அமீரக நாடு உக்ரைன்  நாடு மற்றும் ரஷ்ய நாடு சேர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியபோது கைது செய்யப்பட்ட 12 பெண்கள்மற்றும்  1 ஆண் உள்பட 13 பேரையும் விடுதலை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளனர். விடுதலை செய்யப்பட்ட பிறகு அவர்கள்  அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற்ற படுவதாக முடிவு எடுத்துள்ளனர்.

இந்த சட்டவிரோத செயல் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் புகைப்பட நிகழ்ச்சி தொடர்பாக விசாரணை நிறைவு செய்யப்பட்டுள்ளது. புகைப்பட நிகழ்ச்சியில் தொடர்புடைய அனைவரும் ஐக்கிய அரபு அமீரகத்தை விட்டு உடனடியாக வெளியேற்றப்படுவார்கள். இது தவிர வேறு எந்தவித மாற்றுக்கருத்தும் கிடையாது என்று அதிகாரப்பூர்வமாக கூறியுள்ளனர்.
.

Categories

Tech |