துபாயில் கலை மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்காக அல்கூஸ் என்ற புதிய படைப்புத்திறன் மாவட்டத்தை உருவாக்கியுள்ளது.
துபாயில் கலை மற்றும் கலாச்சாரத்தின் படைப்புத்திறனை மேம்படுத்துவதற்காக புதியதாக ஒரு நகரத்தை உருவாக்கியுள்ளனர். மேலும் புதியதாக உருவாக்கப்பட்ட நகரத்திற்கு ‘அல் கூஸ்’ படைப்புத்திறன் மாவட்டம் என்ற பெயரும் சூட்டப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தை கலை மற்றும் கலாச்சார திற்கான ‘ஸ்மார்ட் நகரம் ‘என்று அறிமுகப்படுத்தியுள்ளனர்.
உலக அளவில் பொருளாதாரத்தின் தலைநகராக துபாயை உருவாக்கும் விதத்தில் இந்தத் திட்டம் செயல்படுத்தப் போவதாக அறிவித்துள்ளனர். இந்த புதிய படைப்புத்திறன் மாவட்டத்தை மேம்படுத்துவதற்கான பணிகளை துபாய் கலை மற்றும் கலாசார ஆணையத்தின் தலைவர் ஷேக்கா லத்திபா பிந்த் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் மேற்கொள்வதாகவும் துபாயின் பொருளாதார வளர்ச்சியை நாம் விரைவில் காண்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் இதற்காக நிறுவனங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதாகவும் அதாவது 8000 உள்ள படைப்பு நிறுவனங்களின் எண்ணிக்கையை 15000 உயர்த்த இருப்பதாகவும் ஊழியர்களின் எண்ணிக்கையை 70 ஆயிரத்திலிருந்து 1. 50 ஆயிரம் வரை உயர்த்தி புதிய வேலைவாய்ப்பை வழங்குவதாகவும் கூறியுள்ளார்.
மேலும் இந்த புதிய திட்டம் குறித்து துபாய் பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் ஹம்தான் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் தற்போது உருவாக்கப்பட்டுள்ள அல்கூஸ் ஸ்மார்ட் நகரம் முழுவதும் படைப்பாற்றல் மிக்கவர்களுக்கு அளிப்பதற்காக ஒருங்கிணைந்து உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.சிறந்த திறமை யாளர்களுக்கு புதிய படைப்புகளை உருவாக்கவும் திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் சலுகைகள் வழங்குகிறது.
இதனை தொடர்ந்து அவர்கள் புதிய நிறுவனங்களை உருவாக்கவும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் நகரம் துபாயின் வளர்ச்சிக்கு புதிய படியாக அமைந்திருக்கிறது. உலகம் முழுவதும் உள்ள படைப்பாளர்களுக்கு வாய்ப்பளிக்கும் சிறந்த தளமாக விளங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.