துறைமுகத்தில் நின்று கொண்டிருந்த கப்பல் திடீரென வெடித்து சிதறியதில் கட்டிடங்கள் அதிர்ந்தன.
துபாய் நாட்டில் உள்ள ஜெபெல் அலி துறைமுகத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு கப்பல் திடீரென வெடித்து சிதறியது. இந்த தீ விபத்தினால் துறைமுகத்திற்கு 25 கி.மீ தொலைவில் இருக்கும் அடுக்குமாடி கட்டிடங்களில் உள்ள ஜன்னல்கள் மற்றும் சுவர்கள் அதிர்ந்ததில் மக்கள் அச்சத்தில் உறைந்தனர்.
இதனை அடுத்து கப்பலினுள் ஏதேனும் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்கள் இருந்தனவா? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.