Categories
சென்னை மாவட்ட செய்திகள்

துபாய் போகணும்…! திருதிருவென முழித்த 5பேர்… விசாரணையில் அதிர்ச்சி … சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு …!!

சென்னையில் இருந்து துபாய்க்கு கடத்த முயன்ற 60 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சியை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை விமான நிலையத்தில் இண்டிகோ ஏர்லைன்ஸ் சிறப்பு விமானம் துபாய்க்கு இன்று காலை புறப்பட தயார் நிலையில் இருந்தது. அந்த விமானத்தில் பயணம் செய்யவிருந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் சந்தேகத்திற்கிடமான 5 பேரை போலீசார் கண்டுபிடித்தனர்.

அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். இதனால் அவர்களை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனையிட்டனர். சோதனையில் அவர்களின் உள்ளாடைகளில் கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர், சவுதி ரியால் போன்ற வெளிநாட்டு கரன்சிகளை வைத்திருப்பது தெரியவந்தது.

chennai air customs officials seized  foreign currency

அதன் பின் அவர்கள் கொண்டுவந்த கைப்பைகளை சோதனையிட்டபோது அதிலும் வெளிநாட்டு பணம் இருந்ததைக் கண்டறிந்தனர். அவர்கள் கொண்டுவந்த வெளிநாட்டு கரன்சியின் இந்திய மதிப்பு 60 லட்சம் ஆகும். இதையடுத்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்து, யாரிடம் இப்பணத்தை பெற்று, யாரிடம் கொடுக்க சென்றார்கள் என்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |