Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

திடீரென மாயமாகும் குத்து விளக்குகள்… வசமாக சிக்கிய வாலிபர்கள்… விசாரணையில் தெரியவந்த உண்மை…!!

குத்துவிளக்கு மற்றும் மோட்டார் சைக்கிள் திருடிய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தென்காசி மாவட்டத்திலுள்ள காசிதர்மம் பகுதியில் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் உள்ள குத்து விளக்குகள் அடிக்கடி திருட்டு போவதாக கோவில் நிர்வாகத்தினர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குத்து விளக்குகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வந்துள்ளனர். இந்நிலையில் அதே பகுதியில் அமைந்துள்ள மற்றொரு கோவிலிருந்து குத்து விளக்குகளை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர் என்று கோவில் மேலாளர் முப்புடாதி என்பவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சந்தேகப்படும்படி இரண்டு நபர்கள் மோட்டார் சைக்கிளில் ஒரு மூட்டையோடு  சென்று கொண்டிருந்தனர். இதனையடுத்து காவல்துறையினர் அவர்களை  நிறுத்தி அந்த மூட்டையை    சோதனை செய்து போது அதில் குத்துவிளக்குகள் இருந்துள்ளது. அதன்பிறகு காவல்துறையினர் அவர்களிடம் நடத்திய  விசாரணையில் அவர்கள் காசிதர்மம் பகுதியில் வசிக்கும் கார்த்திக் குமார் மற்றும் பாலாஜி என்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அவர்கள் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் யானை பாலத்தில் திருடியது என்பதும், காசிதர்மம் பகுதியில் உள்ள கோவிலில் இருந்த குத்து விளக்குகளை திருடி சென்றதும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் காவல்துறையினர் அவர்களிடம் இருந்து ரூபாய் 35 ஆயிரம் மதிப்புள்ள குத்து விளக்குகள் மற்றும் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்துள்ளனர். அதன்பின் கார்த்திக் குமார் மற்றும் பாலாஜி ஆகிய இருவரையும்  காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |