Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

மனைவி எடுத்த விபரீத முடிவு…. பார்த்ததும் அதிர்ச்சியடைந்த கணவர்…. செங்கல்பட்டில் சோகம்…!!

திருக்கழுக்குன்றம் அருகில் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள புலியூர் கிராமத்தில் கருணாகரன்- காயத்ரி என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 1 ஆண் குழந்தை இருக்கின்றது. இதில் கருணாகரன் டிரைவராக பணிபுரிந்து வருகின்றார். எனவே காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியினர் கருணாகரன்- காயத்ரி இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து காயத்ரி உறங்குவதற்காக படுக்கை அறைக்கு சென்றுள்ளார். அதன்பின் கருணாகரன் மற்றொரு அறைக்கு உறங்கச் சென்றுள்ளார்.

இந்நிலையில் விடியற்காலையில் கருணாகரன் எழுந்து காயத்ரி படுக்கை அறைக்கு சென்று பார்த்தபோது அவர் சேலையில் தூக்கிட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தகவலறிந்த திருக்கழுக்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அஞ்சா லட்சுமி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயத்ரி  சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். மேலும் இச்சம்பவம் தொடர்பாக செங்கல்பட்டு வருவாய் ஆர்.டி.ஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Categories

Tech |