Categories
உலக செய்திகள்

3 நாள் துக்கம் அனுசரிப்பு…. மர்ம நபர்களின் வெறிச்செயல்…. பிரபல நாட்டில் நடந்த கொடூர சம்பவம்….!!

ஆயுதமேந்திய மர்ம நபர்கள் கிராமத்திற்குள் புகுந்து சுமார் 132 பேர்களை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புர்கினா நாட்டிலிருக்கும் solhan என்ற கிராமத்திற்குள் ஆயுதமேந்திய மர்ம நபர்கள் புகுந்து சுமார் 132 பேர்களை கொன்றதோடு மட்டுமல்லாமல் அங்கிருந்த வீடுகளையும், உள்ளூர் சந்தையையும் எரித்துள்ளனர். இந்த கொடூர சம்பவத்திற்கு எந்தப் போராளி குழுவும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

இந்நிலையில் அந்நாட்டின் ஜனாதிபதியான Roch kabore என்பவர் புர்கினா முழுவதும் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், தீய சக்தியை நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து எதிர்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் இந்தக் கொடூரத் தாக்குதலில் ஈடுபட்டவர்களை பாதுகாப்பு படையினர் தேடி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து ஐ.நாவின் தலைவரான Antonio Guterres என்பவர், இத்தாக்குதலை நான் வன்மையாக கண்டிக்கிறேன் என்றுள்ளார். மேலும் தீவிரவாதம், வன்முறை போன்றவைகளால் ஏற்படும் உயிரிழப்பிற்கு குரல் கொடுக்கும் ஐ.நா உறுப்பு நாடுகளுக்கு சர்வதேசங்கள் அளிக்கும் ஆதரவை இருமடங்காக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Categories

Tech |