துலாம் ராசி அன்பர்களே..! இன்று குடும்பத்தாரின் உடல்நிலையில் அதிக கவனம் செலுத்த வேண்டி இருக்கும். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் அவ்வப்போது ஏற்படும்.உற்சாகம் குறையும். முயற்சிகளில் தடைகளை சந்திக்கக்கூடும். பொருளாதார நெருக்கடிகள் நிலையிலும் சில சங்கடங்களை இன்று மேற்கொள்ள நேரிடும். எதையும் தள்ளிப் போடவேண்டாம்.
சிறு தவறுகூட பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடும், கவனமாக இருங்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஏற்கனவே செய்த திறமையான பணிகளுக்கு உரிய நல்ல பலனை இன்று பெறுவார்கள். குடும்பத்தில் இருப்பவர்களுடன் தன்மையாக பேசிப் பழகுவது நல்லது. தகப்பனாருடன் வீண் தகராறுகள் வந்து செல்லலாம் பார்த்துக்கொள்ளுங்கள். இன்று குழப்பமில்லாத தெளிவான மனதுடன் நீங்கள் இருக்க வேண்டும்.
என்றால் அதற்கு தியானம் போன்றவற்றில் ஈடுபடுவது ரொம்ப நல்லது. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்தால் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாகவே நடக்கும்.
அதிர்ஷ்ட திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்