துலாம் ராசி அன்பர்களே…..
இன்று யதார்த்த பேச்சு பிறர் மனதை சங்கடப்படுத்தும். தொழில் வியாபாரத்தில் கூடுதல் பணிச்சுமை உருவாகும். புதிய இடங்களில் செலவு ஏற்படலாம். மருத்துவ சிகிச்சை உடல் நலத்திற்கு உதவும். இன்று தொழில் வியாபாரம் தொடர்பான கடின போக்குவரத்தால் அனுகூலம் ஏற்படும். தொழில் வியாபாரம் விரிவுபடுத்துதல் தொடர்பான திட்டங்கள் தோன்றும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயணங்களால் அலைச்சல்களை சந்திக்க நேரிடும்.
குடும்ப உறுப்பினர்களுக்குத் தேவையான துணிகள் போன்றவற்றை வாங்குவீர்கள். கணவன்-மனைவிக்கு இடையே இருந்து வந்த கருத்து வேற்றுமை குறையும். இன்று பொன் பொருள் சேரும். இன்று ஒருமுறைக்கு இருமுறை யோசித்து காரியங்களை மேற்கொள்ளுங்கள், முடிந்தால் பெரியோர்களிடம் கொஞ்சம் ஆலோசனை கேட்டுக் கொள்ளுங்கள். இன்று மாணவ கண்மணிகளுக்கு எந்த பிரச்சனையும் இல்லை நல்ல முன்னேற்றங்களிருக்கும். மேற்கல்வியில் வெற்றி வாய்ப்புகள் வந்து சேரும். விளையாட்டு துறையிலும் வெற்றி வாய்ப்புகள் வந்து சேரும்.
இன்று மிக முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெளிர் நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெளிர் நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவிலேயே இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்தும் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்ட திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம் மற்றும் வெள்ளை நிறம்