துலாம் ராசி அன்பர்களே…!! இன்று தொட்ட காரியம் வெற்றி பெறும் நாளாக இருக்கும்.தொகை கேட்ட இடத்தில் வந்து சேரும். குடும்ப தேவைகளை பூர்த்தி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் அனுகூலமாக நடந்துகொள்வார்கள். இன்று மற்றவர்களின் வேலைகளுக்காக அலைய வேண்டியிருக்கும்.
உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனமாக இருங்கள். இன்று மற்ற தேவைகளை பூர்த்தி செய்வதிலேயே உங்களுடைய கவனம் இருக்கும். வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கையாக செல்லுங்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் சரியாகும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு இருக்கும். உங்களுடைய உறவில் திருப்திகரமான சூழ்நிலை காணப்படும் பிள்ளைகள் கல்வியிலும் மற்ற வகையிலும் சிறந்து விளங்குவார்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீல நிறம் உங்களுக்கு எப்போதுமே அதிஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்து காரியமே ரொம்ப சிறப்பாக நடக்கும்.
இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் சிவப்பு நிறம்