துலாம் ராசி அன்பர்களே…!! இன்று செய்யும் செயல்களில் தடுமாற்றம் கொஞ்சம் ஏற்படலாம். நண்பரின் ஆலோசனை உங்களுக்கு நம்பிக்கையை கொடுக்கும்.தொழில் வியாபாரத்தில் நிலுவை பணியை நிறைவேற்ற வேண்டும். உணவில் கட்டுப்பாடு வேண்டும். பொருட்களை இரவலாக கொடுக்க வேண்டாம். இன்று பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் சாதகமான நிலை காணப்படும். தான தர்மத்தில் இன்று நீங்கள் ஈடுபடுவீர்கள்.
ஆன்மீக பணிகளில் ஈடுபடவும் தோன்றும். நீண்ட தூர பயணங்கள் செல்லலாம், பயணத்தின் பொழுது கவனம் இருக்கட்டும். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க கூடும். இன்று குறிக்கோள் அற்ற வீண் அலைச்சல் கொஞ்சம் இருக்கும். தைரியம் கூடும். இன்று எந்த உத்திரவாதமும் தயவு செய்து ஏற்றுக் கொள்ளாமல் இருங்கள் அது போதும்.
இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று லட்சுமி வழிபாட்டையும் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தையும் அன்னதானமாக கொடுங்கள், வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் இருக்கலாம்.
இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிஷ்ட எண்: 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் மஞ்சள்