Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு… “பாராட்டும் புகழும் கூடும்”… செல்வ செழிப்பு கூடும்…!!

துலாம் ராசி அன்பர்களே…!! இன்று பாராட்டும் புகழும் கூடும் நாளாக இருக்கும். பக்குவமாகப் பேசி காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள். தொழில் முன்னேற்றம் கருதி பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள். மாலையில் உறவினரால் விரையம் கொஞ்சம் உண்டாகும். இன்று உத்யோகத்தில் இருப்பவர்கள் கடினமான பணிகளை செய்ய வேண்டி இருக்கும், வேலையை விட்டுவிட்டு வேறு வேலைக்குச் செல்லலாமா என்று கூடத் தோன்றலாம்.

மனம் தளராமல் எதிலும் செயல்படுங்கள். குடும்பத்தில் அமைதி கொஞ்சம் குறையலாம், கணவன் மனைவிக்கு இடையே திடீர் மனஸ்தாபங்கள் கூட ஏற்படலாம். பெண்களுக்கு கருத்து வேற்றுமையால் பிரிந்து சென்றவர்கள் கருத்து வேற்றுமை நீங்கி மீண்டும் நட்பு பாராட்டுவார்கள். மனதில் புதிய தெம்பும் உற்சாகமும் அதிகரிக்கும். இன்றைய நாள் செல்வச் செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.

இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது இளம் நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், இளம் நீலநிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல், இன்று  முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்து காரியமுமே ரொம்ப சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கு அதிஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் இளம் மஞ்சள்

Categories

Tech |