துலாம் ராசி அன்பர்களே, இன்று தொகை வரவு திருப்தி தரும் நாளாகவே இருக்கும். தொழில் வளர்ச்சி மேலோங்கும். குடும்ப முன்னேற்றம் கூடும். குடும்பத்தினர் உங்கள் சொல் கேட்டு நடக்க வேண்டியிருக்கும். பாராட்டும், புகழும் கூடும். பயணம் செல்ல வேண்டி இருக்கும், பயணம் நல்ல பலனை கொடுப்பதாகவே அமையும். குடும்பத்தில் சின்ன சின்ன சண்டைகள் கொஞ்சம் உருவாகலாம். வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம்.
கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது, பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வது நன்மையை கொடுக்கும். மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். நீங்கள் எந்த ஒரு காரியத்தையும் செய்யும் பொழுதும், மின் சாதனங்களைப் பயன்படுத்தும் பொழுதும் ரொம்ப கவனமாக பயன்படுத்த வேண்டும். இன்று மாணவர்கள் கொஞ்சம் பொறுமையை கையாளுங்கள், படித்ததை எழுதிப் பாருங்கள், நிதானமாக செயல்படுங்கள்.
இன்று விளையாட்டில் ஆர்வம் செல்லும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஊதா நிறம் உங்களுக்கு சிறப்புவாய்ந்த நிறமாகவே இருக்கும். அது மட்டும் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்ட திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: ஊதா மற்றும் வெள்ளை நிறம்