துலாம் ராசி அன்பர்களே..! இன்று நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். அஜீரணக் கோளாறுகள் போன்றவை ஏற்படக்கூடும். ஆகையால் உணவு பழக்கவழக்கத்தில் கொஞ்சம் கவனமாக இருங்கள். மனைவியின் கழகத்தால் சில பிரச்சினைகளை நீங்கள் சந்திக்க கூடும். மற்றவரிடம் அவ்வப்போது பகைமை பாராட்டாமல் இருப்பது ரொம்ப நல்லது. அதிகாரியிடம் பணிவாக நடந்து கொள்ளுங்கள். அனுகூலமான பலன்களை பெறுவதற்கு இறை வழிபாட்டுடன் இன்றைய நாளில் காரியங்களை தொடங்குங்கள்.
பணவரவு ஓரளவு மன திருப்தியை கொடுக்கும். புதிய நபர்களின் அறிமுகமும் நட்பும் கிடைக்கப்பெறுவீர்கள். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாகவே நடந்து முடியும். வாகனங்களை பயன்படுத்தும்பொழுது கவனமாக இருங்கள், தொழில் வியாபாரம் நிறைவான லாபம் உங்களுக்கு கிடைக்கக்கூடும். கூடுமானவரை இன்று மனதை அமைதியாக வைத்துக் கொள்வதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள், தேவையில்லாத விஷயத்தை மட்டும் மனதில் போட்டு குழப்பிக் கொண்டிருக்க வேண்டாம், அதையும் நீங்கள் கவனத்தில் கொள்ளுங்கள்.
காதலர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும் காதல் கொஞ்சம் அதிகமாகவே என்று பயப்படும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது, மஞ்சள் நிறம் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று இல்லத்தில் முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள், காரியங்கள் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்ட திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்