Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…தடைகள் விலகி செல்லும்.. ரகசியங்களை பாதுகாத்திடுங்கள்..!!

துலாம் ராசி அன்பர்களே, இன்று பணிகள் நிறைவேற முன்னேற்பாடுகள் செய்வீர்கள். தொழில் வியாபாரத்தில் உள்ள அனுகூலத் தன்மைகளை பிறரிடம் சொல்ல வேண்டாம். கூடுமானவரை ரகசியங்களை இன்று பாதுகாத்திடுங்கள். கூடுதல் பணவரவு குடும்ப தேவைகள் நிறைவேறும். வீட்டில் ஒற்றுமையும், மகிழ்ச்சியும் கூடும். பணியாளர்களுக்கு சலுகைகள் கிடைக்கும். இன்று  குடும்பத்தில் சுபகாரிய பேச்சுகள் நடக்கும்.

திருமண முயற்சிகள் சாதகமான பலனையே கொடுக்கும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் இருக்கட்டும். தடைகள் ஓரளவு விலகிச்செல்லும். பணவரவு திருப்தியைக் கொடுக்கும். காதலர்களுக்கு இன்று கைகூடும் நாளாகவே இருக்கும். இன்று சொன்ன சொல்லை காப்பாற்றுவதற்கு கடுமையாக உழைப்பீர்கள். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். உங்கள் மனதிற்கு பிடித்த பொருட்களை இன்று நீங்கள் வாங்கக்கூடிய நாளாகவே இருக்கும்.

பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் பரிபூரணமாக கிடைக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் செய்யுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்ட திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் ஆரஞ்சு நிறம்

Categories

Tech |