Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு.. எந்த காரியத்தையும் கவனமாக செய்யுங்கள்… பேசும்போது நிதானத்தை கடைபிடியுங்கள்..!!

துலாம் ராசி அன்பர்களே, இன்று சொந்த பிரச்சனையை பற்றி பிறரிடம் தயவு செய்து பேசவேண்டாம். கூடுமானவரை ரகசியங்களை இன்று பாதுகாத்து கொள்ளுங்கள்,  கூடுதல்  உழைப்பும் தொழில் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி மாற்றத்தை கொடுக்கும், பணவரவை விட புதிய விஷியங்களில் செலவு கொஞ்சம்  ஏற்படும், வாகனத்தில் மிதவேகம் பின்பற்றுவது நல்லது . இன்று காரிய தடை தாமதம் கொஞ்சம் வந்து செல்லும்.

புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவதும் கவனமாக செயல்படுவதும் ரொம்ப நல்லது குடும்பப் பிரச்சினைகள் ஓரளவு கட்டுக்குள் இருக்கும் எதுவும் வரட்டும் என்று பார்த்துக் கொள்ளலாம், என்று முரட்டு  தைரியம் மட்டும் தயவு செய்து வேண்டாம். பொருளாதாரத்தில் உள்ள சிக்கல்கள் ஓரளவு சரியாகும். நீண்ட நேரம் கண் விழித்து கொண்டு இருக்காதீர்கள். உடல் நலத்தை பாதிக்கும் பார்த்து நடந்து கொள்ளுங்கள்.

இன்று  மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் எந்த பிரச்சினையும் இல்லை,  நல்ல முன்னேற்றம் இருக்கும். மற்றவர்களின்  ஒத்துழைப்பு இருக்கும், ஆசிரியர்கள் முழுமையான ஒத்துழைப்பு இருக்கும் இதனை நீங்கள் சரியாக பயன்படுத்தி கல்வியில் மென்மேலும் வளர்ச்சி அடைவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவிலே இருக்கும் அதுமட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்ன தானமாக கொடுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்துமே நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 2

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீலம்

Categories

Tech |