துலாம் ராசி அன்பர்களே, இன்று யோகமான நாளாகத்தான் இருக்கும். எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். கொள்கைப் பிடிப்போடு செயல்படுவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். இன்று பணவரவு கூடும், வாக்கு வன்மையால் லாபம் உண்டாகும். வீண் அலைச்சலும் ஏற்படும். இட மாற்றம் கூட ஏற்படலாம், கெட்ட கனவுகள் அவ்வப்போது வந்து செல்லும்.
உடல்நிலையில் ஆரோக்கியமாக இருப்பது ரொம்ப நல்லது. கூடுமானவரை உஷ்ணம் சம்பந்தமான நோய்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது, அதை மட்டும் நீங்கள் கவனத்தில் கொள்ளுங்கள். நேரம் தவறி உணவு உண்பதே தயவு செய்து தவிர்த்து விடுங்கள். இன்று உற்றார் உறவினரின் வருகையால் செலவு கொஞ்சம் கூடும், பார்த்துக்கொள்ளுங்கள். இன்று மாணவ செல்வங்களுக்கு உற்சாகமான நாளாக தான் அமையும். எதிலும் வெற்றி வாய்ப்புகள் ஏற்படும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிஷ்ட திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்