Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு.. மாறுபட்ட சூழல் உருவாகும்.. உறவுகள் நீடிக்கும்..!!

துலாம் ராசி அன்பர்கள், இன்று மனம் புகழ்ச்சியை விரும்பும் நாளாக இருக்கும், நண்பரின் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் மாறுபட்ட சூழல் இருக்கும், கொஞ்சம் பணக்கடன் பெறுவீர்கள். அதிக பயன் தராத பொருட்களை மட்டும் வாங்காதீர்கள் இன்று புதிய விதமான உறவுகள் நீடிக்கும்.

வேலைவாய்ப்பில் இருந்த சுணக்கம் நிலை மாறும், உங்களது வாக்கு வன்மை கூடும், தைரியம் கூடும்.  மாணவர்களுக்கு படிப்பில் கொஞ்சம் கவனம் இருக்கட்டும், மிகவும் எச்சரிக்கையுடன் படித்தால் ,இன்று  சாதனைகளை  புரிவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

விளையாடும் பொழுது மாணவர்கள் கொஞ்சம் கவனமாக விளையாடுவது நல்லது. இன்று  கணவன் மனைவிக்கு இடையே சின்ன, சின்ன பூசல்கள்  இருக்கும். கூடுமானவரை எதையும் பேசி தீர்த்துக்கொள்வது ரொம்ப நல்லது, தயவு செய்து நீங்கள் கோபப்படாமல் இருங்கள் அது போதும்.

முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது காவி நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், காவி நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில்  இருக்கும் அது மட்டுமில்லாமல் இன்று  சனிக்கிழமை என்பதால், எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் நீங்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்:  7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : கவி மற்றும் இளம்சிவப்பு

Categories

Tech |