துலாம் ராசி அன்பர்களே, இன்று விரோதிகள் விலகிச்செல்லும் நாளாகவே இருக்கும். வீடு கட்டும் முயற்சி வெற்றியை கொடுக்கும். தந்தை வழியில் ஏற்பட்ட தகராறு விலகிச் செல்லும். ஒரு பூர்வீக சொத்துக்களை விற்று புதிய சொத்துக்களை வாங்கும் யோகம் உண்டாகும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
வேலை தொடர்பாக வெளியூரில் தங்க நேரலாம். குடும்பத்தில் இருப்பவர்கள் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் நடக்கும். வாழ்க்கைத் துணைக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். கணவன் மனைவிக்கு இடையில் அன்பு கூடும். அக்கம்பக்கத்தினர் இடம் கவனமாக பேசுவதும் வாக்குவாதத்தை தவிர்ப்பதும் ரொம்ப நல்லது.
இன்று மாணவச் செல்வங்கள் கொஞ்சம் கஷ்டப்பட்டு படியுங்கள், படித்த பாடத்தை எழுதிப் பாருங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஆரஞ்சு நிறம் உங்களுக்கு எப்பொழுதுமே அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும்.
அதுமட்டுமில்லாமல் இன்று நீங்கள் முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் வெளிர் பச்சை நிறம்