Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…திடீர் செலவு கொஞ்சம் ஏற்படும்…பேசும்பொழுது கவனமாக இருங்கள்..!!

துலாம் ராசி அன்பர்களே, இன்று தொட்ட காரியம் வெற்றி பெறும் நாளாக இருக்கும். தொழில் சம்பந்தப்பட்ட புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்ற கொள்கைப் பிடிப்போடு செயல்படுவீர்கள். வருமானம் திருப்திகரமாக இருக்கும். கோபம், படபடப்பு குறையும்.

மற்றவர்களுடன் இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கும். திடீர் செலவு கொஞ்சம் உண்டாகும். இன்று  எந்த ஒரு பிரச்சனையும் சுமுகமாகத் தீர்ப்பீர்கள். வாகனம் மூலம் செலவுகள் ஏற்படும். நண்பரிடம் பேசும்போது கொஞ்சம் கவனமாக பேசுங்கள், எந்தவித பிரச்சனையும் இல்லாமல் பேசுவது சிறப்பு. தயவுசெய்து வாக்குவாதங்கள் மட்டும் செய்ய வேண்டாம்.

இன்று வெளியூர் பயணம் மேற்கொள்ளும் பொழுது கொஞ்சம் அலைச்சல் ஆகத்தான் இருக்கும். சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ளுங்கள். அது போதும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்.

பச்சைநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்:-4 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |