துலாம் ராசி அன்பர்களே, இன்று தொழில்நுட்பத்தில் பணிபுரிபவர்களுக்கு சிறப்பான நாளாகவே இருக்கும். புதிய சொத்துக்கள் அமையும். நல்ல நண்பர்களின் நட்பு கிடைக்கும். அதனால் மகிழ்ச்சி ஏற்படும். எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தீட்டும் திட்டங்கள் வெற்றிகரமாக அமையும். தொழில் வியாபாரம் பற்றிய கவலை கொஞ்சம் இருக்கும், பார்த்துக் கொள்ளுங்கள்.
பழைய பாக்கிகளை வசூலிப்பதில் வேகம் காட்டுவீர்கள். ஆர்டர் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்திலிருப்பவர்கள் கூடுதலான பணிகளை கவனிக்க வேண்டி இருக்கும். வேலை மாறுதல் பற்றிய எண்ணமும் உருவாகும். இன்று எல்லா வகையிலும் ஓரளவு நிலைதான் பெறுவீர்கள். முடிந்தால் ஆலயம் சென்று வாருங்கள், ரொம்ப சிறப்பாகவே இருக்கும். கூடுமானவரை வாக்குறுதியை மட்டும் யாருக்கும் கொடுக்க வேண்டாம்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் வெளிர் பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், இந்த நிறம் உங்களுக்கு சிறப்பை கொடுப்பதாக இருக்கும். அதுமட்டுமில்லை இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும். அது போலவே இன்று மாணவர்களுக்கு ஒரு முக்கியமான நாளாகவே இருக்கும்.கல்வியில் தேர்ச்சி விகிதம் அதிகமாகவே இருக்கும். சக மாணவர்களின் ஒத்துழைப்பு முழுமையாகவே கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் இளம் மஞ்சள் நிறம்