Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…வீண் அலைச்சல் உண்டாகும்…கோபத்தை குறைத்து கொள்ளுங்கள்..!!

துலாம் ராசி அன்பர்களே,  இன்று விஐபிகள் வீடு தேடி வரும் நாளாகவே இருக்கும். புதிய தொழில் தொடங்க தீட்டிய திட்டங்கள் வெற்றியை கொடுத்து,  விரும்பிய படியே நடக்கும். இல்லத்தின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். இன்று கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆதரவுகளை காண முயற்சிகள் சாதகமான பலனையே கொடுக்கும்.
வீண் அலைச்சலை சந்திக்க நேரிடும், கோபமாக பேசுவதை தவிர்த்து விடுவது ரொம்ப நல்லது. மேல் மட்டத்தில் உள்ளவர்கள் வாக்குவாதத்தில் கொஞ்சம் ஏற்படலாம், கவனமாக இருங்கள். சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபட வேண்டியிருக்கும். தேவையான உதவிகள் மற்றவர்களிடமிருந்து உங்களுக்கு தாமதமாகவே வந்து சேரும்.
இன்று மாணவர்கள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும், வாகனத்தில் செல்லும்போதும் பொறுமையாக இருக்க வேண்டும். கொடுக்கல், வாங்கலிலும் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். அது மட்டுமில்லாமல் இன்று யாருக்கும் ஜாமீன் கையெழுத்து தயவுசெய்து போடாதீர்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று  சிவபெருமான்   வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் பச்சை நிறம்

Categories

Tech |