துலாம் ராசி அன்பர்களே …!! இன்று துவங்குகிற பணி முழு அளவில் வெற்றியை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் ஒரளவு அபரிதமான வளர்ச்சி ஏற்படும்,ஆனால் கொடுக்கல் வாங்கலில் ரொம்ப கவனம் வேண்டும். பெரிய தொகையை தயவுசெய்து கொடுக்கல்-வாங்கலில் ஈடுபடுத்த வேண்டாம். மிக முக்கியமாக யாருக்கும் ஜாமீன் கையெழுத்து வாக்குறுதிகளையும் கொடுக்க வேண்டாம்.உறவினர்கள் மூலம் சிறு தொல்லைகள் இன்று நீங்கள் சந்திக்க கூடும்.
குடும்பத்தேவைகளை சரிசெய்வதற்கு கொஞ்சம் செலவு தான் ஆகும்,அதற்காக இன்று பணத்தை கடனாகப் பெற வேண்டாம். இளமைகால நண்பர்களை சந்திக்க கூடிய வாய்ப்புக்கள் ஏற்படும்.பால்ய நண்பர்களால் உதவிகள் உங்களுக்கு கிடைக்கும்.அலுவலக பணிகளை மிகச் சிறப்பாகவே செய்து முடிப்பீர்கள்,அதனால் மேலதிகாரியிடம் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.கூடுமானவரை எதையும் பற்றிக் கவலைப்படாமல் காரியத்தை மட்டும் செய்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
குடும்பத்தில் இருப்பவர்களால் நன்மை இருக்கும், ஆனால் நீங்கள் குடும்பத்தாரிடம் தயவுசெய்து கோபப்பட வேண்டாம். கணவன் மனைவிக்கு இடையே சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து செல்லும் கூடுமான வரை பொறுமையாக நிதானமாக செயல்படுங்கள். பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள், அவரது போக்கில் அவரை விட்டுப் பிடிப்பது தான் ரொம்ப சிறப்பு. உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சின்னச் சின்ன வலிகள் மட்டுமே வந்து செல்லும்.
வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் இருக்கும் கவனத்தில் கொள்ளுங்கள்.காது கோளாறு ஏற்பட கூடும்.கூடுமானவரை உணவை மட்டும் சரியான உணவை தேர்ந்தெடுத்து உண்ணுங்கள்.இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிஷ்ட எண்கள் : 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்