Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…மனம் புத்துணர்ச்சி பெரும்…போட்டிகள் ஏற்படும்…!

 

துலாம் ராசி அன்பர்களே …!   இன்று உங்களை அவமதித்து பேசியவர் அன்பு பாராட்டக் கூடும். இதனால் உங்களுடைய மனம் புத்துணர்ச்சி பெற கூடும் .  தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். எதிர்பார்த்த சுப செய்தி வந்து சேரும். குடும்பத்தில் ஒற்றுமை மகிழ்ச்சி கூடும். இன்று பணம் சம்பாதிக்கும் திறமை அதிகமாக தடைப்பட்டுவந்த காரியங்கள் அனைத்தும் சாதகமாக நடந்து முடியும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் செல்லும்.

தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் போட்டிகளை சந்திக்க வேண்டி இருக்கும். பெண்கள் எந்த ஒரு காரியத்தையும் செய்யும் முன் தீர ஆலோசனை செய்வது ரொம்ப நல்லது. எதிலும் கவனமாக ஈடுபடுங்கள். உடல் ஆரோக்யத்தில் ரொம்ப கவனம் ஏற்படும். சரியான உணவை தேர்ந்தெடுத்து உண்ணுங்கள், அதேபோல சரியான நேரத்திற்கு தூங்கச் செல்லுங்கள்.

பெரிய தொகையை ஈடுபடுத்தி எந்தவித உதவிகளும் இப்போதைக்கு செய்ய வேண்டாம் கவனத்தில் கொள்ளுங்கள். குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் அனைத்துக் காரியமும் சிறப்பாகவே இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டால் அதிஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டால் காரியங்கள் அனைத்தும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு

அதிஷ்ட எண்கள் : 5 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |