Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு… அன்பு அதிகரிக்கும்…துணிச்சல் பிறக்கும்…!

 

துலாம் ராசி அன்பர்களே …!  இன்று எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பழைய உறவினர் நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திகள் வந்துசேரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையை நீங்கள் பெறப்படும். மதிப்புக் கூடும் நாள்.

திட்டமிட்டபடி  செயல்களை மாற்றுவதில் கவனம் செலுத்துவீர்கள். துணிச்சலாக எதிலும் ஈடுபடுகிறீர்கள். வாகனங்களில் செல்லும் பொழுதும் பயணங்களின் பொழுது எச்சரிக்கையாக இருங்கள். தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் சாதுர்யமான பேச்சினால் எதிலும் லாபம் காண்பீர்கள். இன்று வருமானமும் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். குடும்பத்தைப் பொறுத்தவரை ஒற்றுமை பலப்படும். சகோதரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

மனைவி மீது அதிக அன்பு கொள்வீர்கள் அது மட்டும் இல்லாமல் எல்லோரிடமும் அன்பாக நடந்து கொள்வீர்கள். காதலர்களுக்கு இன்று சிறப்பான நாளாக அமையும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஊதா நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று வெள்ளிக்கிழமை என்பதால் அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு

அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் ஊதா நிறம்.

Categories

Tech |