துலாம் ராசி அன்பர்களே …! இன்று சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவிற்கு ஆளாவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தர்மசங்கடமான சூழ்நிலையை தான் இன்று, நீங்கள் சமாளிக்க வேண்டியிருக்கும். காரியத்தடை வீண் அலைச்சல் ஏற்படலாம். நீண்ட நாட்களாக வரவேண்டிய பணம் ஓரளவு வந்து சேரும்.
திடீர் கோபம் தலைதூக்கும். எதிர்பாலினரிடம் கவனமாக பழகுவது நல்லது .பேசும்போது நிதானத்தைக் கடைபிடியுங்கள். மற்றவர்களின் மீது அன்புடன் நடந்து கொள்ளுங்கள். மிக முக்கியமாக அக்கம்பக்கத்து வீட்டுக்காரரிடம் கோபம் ஏதும் காட்ட வேண்டாம். கணவன் மனைவிக்கு இடையே சின்ன சின்ன பிரச்சனைகள் வந்தாலும் சுமுகமான உறவு நிலைத்திருக்கும் கவலை வேண்டாம். காதலர்களுக்கு இன்று சிறப்பான நாளாக தான் இருக்கின்றது, எந்தவித பிரச்சினையும் இல்லை
இன்று வாகனத்தில் செல்லும்போது மட்டும் கொஞ்சம் கவனமாகவே செல்லுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டால் நன்று. இளம் மஞ்சள் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாக நடக்கும்.