துலாம் ராசி அன்பர்களே …! இன்று வாயை அடக்கி வம்புக்கு செல்லாமல் இருப்பதுதான் ரொம்ப நல்லது. பெண்களால் விரயச் செலவுகள் ஏற்படும். பொருட்களின் மீது முதலீடு செய்வது ரொம்ப நல்லது. தேவையில்லாத பொருட்களை வாங்கி குவிக்க வேண்டாம் பார்த்துக்கொள்ளுங்கள். வாழ்க்கையில் புதிய மாற்றங்கள் இன்று நிகழும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கு இடையே சின்னச்சின்ன கருத்து வேற்றுமைகள் வரும்.
பிள்ளைகளின் செயல்பாடுகள் ஆறுதலைக் கொடுக்கும். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். அடுத்தவர்களின் செயலால் கோபம் கொஞ்சம் ஏற்படும். கொடுத்த கடன் திரும்ப பெறுவதில் முழுமூச்சுடன் செயல்படுவீர்கள். இன்றைய நாள் உற்சாகமாகவே நீங்கள் காணப்படுவீர்கள், இருந்தாலும் காதலர்களுக்கு இடையே சின்ன சின்ன வாக்குவாதங்கள் அவ்வப்போது வந்து செல்லும் பார்த்துக்கொள்ளுங்கள். இன்று எதிரிகள் உங்களிடம் கடுமையாக நடந்து கொள்ளக் கூடும் அந்த விஷயத்தில் நீங்கள் ரொம்ப பொறுமை காக்க வேண்டும்.
கூடுமானவரை உங்கள் செயல்பாடுகளில் சிறிய மாற்றங்கள் செய்து கொண்டாலே போதுமானது. முடிந்தால் இறை வழிபாட்டுடன் இன்றைய நாளை தொடங்குங்கள் மிகச் சிறப்பாக இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம்பச்சை நிறத்தில் ஆடை கிடைப்பது ரொம்ப நல்லது. மேலும் பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று குருபகவான் வழிபாட்டையும், சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியங்களை செய்யுங்கள். காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு
அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 4
அதிர்ஷ்ட நிறம்: நீலம் பச்சை மற்றும் மஞ்சள் நிறம்.