Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…தெளிவு பிறக்கும்.. தெய்விக சிந்தனை மேலோங்கும்..!!!

துலாம் ராசி அன்பர்களே, இன்று தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாளாகவே இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரக் கூடும். மறதியால் நின்ற பணிகள் மீண்டும் செய்வீர்கள். தொழில் தொடர்பான புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். எந்த ஒரு விஷயத்திலும் ஈடுபடும் பொழுது தயக்கம் ஏற்பட்டு, பின்னர் தெளிவு ஏற்படும்.

குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். கணவன், மனைவிக்கு இடையே எதையும் பேசி தெளிவுபடுத்திக் கொள்வது ரொம்ப நல்லது. குழந்தைகளுக்கான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்திற்கு தேவையான பொருட்களையும் வாங்க கூடும். இன்று கூடுமானவரை செலவை மட்டும் கொஞ்சம் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள், அது போதும்.

இன்று மாணவர்களுக்கு கல்வியில் சிறப்பான வெற்றி வாய்ப்புகள் ஏற்படும். விளையாட்டு துறையிலும் வெற்றி வாய்ப்புகள் ஏற்படும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்,வெள்ளை நிறம் உங்களுக்கு  அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்புடன் வாழலாம்.

அதிர்ஷ்ட திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீலம் நிறம்

Categories

Tech |