Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…பணப்புழக்கம் அதிகரிக்கும்…தேவைகள் பூர்த்தியாகும்…!

துலாம் ராசி அன்பர்களே …!     இன்று தேவைகள் பூர்த்தியாகும் நாளாக இருக்கும். திடீர் வரவு வந்து சேரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வியாபாரம் தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். வெளிவட்டார பழக்க வழக்கங்கள் விரும்பும் விதத்தில் அமையும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு விஷயத்தை பெரிதாக பேசுவார்கள். கணவன் மனைவிக்கு இடையே நிதானமான போக்கு காணப்படும்.

பிள்ளைகளின் கருத்தை அறிந்து அதற்கு ஏற்றார்போல் செயல்படுவது நன்மையைக் கொடுக்கும். மூத்த சகோதரர் உடல்நலத்தில் கவனம் வேண்டும். அதே போல நீங்களும் சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொண்டு சரியான நேரத்திற்கு தூங்கச் செல்ல வேண்டும். கூடுமானவரை கொடுக்கல் வாங்கலில் நிதானத்தை கடைபிடியுங்கள். யாரிடமும் வாக்குவாதங்கள்  வேண்டாம்.

காதலர்களுக்கு இனிமையான நாளாக இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய ரொம்ப நல்லது. பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியங்களை செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் நீல நிறம்.

Categories

Tech |